எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு{ர்ந்த பெம்மானை யெம்மா னென்று பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித் தானை முத்தினை யென்மணியை மாணிக் கத்தை முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச் சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.எத்திசையும் எனத்தொடங்கும் தேவாரம்