எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம் பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப் பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப் பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.எத்திக்கு எனத்தொடங்கும் தேவாரம்