எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.எத்தாயர் எனத்தொடங்கும் தேவாரம்