எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனுராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே.