எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணி னல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் புஜம்புகலூர் மேவிய புண்ணி யனே.எண்ணுகேன் எனத்தொடங்கும் தேவாரம்