எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.எண்ணிடை எனத்தொடங்கும் தேவாரம்