எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.