எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர் கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம் மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப் பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.