எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார் திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம் பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார் ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.