எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்ப மேய இறைவன் நீயே வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயே தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.எண்டிசைக்கும் எனத்தொடங்கும் தேவாரம்