எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.