எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்ட லரிடு வார்வினை மாயுமாற் கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ ரட்ட னாரடி சேரு மவருக்கே.
எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.எட்டு எனத்தொடங்கும் தேவாரம்