எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்புஜர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக் கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே.எச்சில் எனத்தொடங்கும் தேவாரம்