எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம் அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.எச்சனிணைத் எனத்தொடங்கும் தேவாரம்