Senthamil.Org

ஊழியூழி

தேவாரம்

ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் 
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால் 
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய 
கேழல்புஜழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.
ஊழியூழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும் 
ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக் 
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை 
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.
ஊழியூழி எனத்தொடங்கும் தேவாரம்