ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில் வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.