ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம் ஆர்ந்த மடமொழி மங்கையோர் பாகம் மகிழ்ந்துடையான் சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்றிரு வேதிகுடிச் சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.