ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்று{ரில் ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.