ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ புஜம்பாவாய்.
ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ் சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும் வார்தரு புஜங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும் ஆதிரை நாளுகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.ஊர்திரை எனத்தொடங்கும் தேவாரம்