ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும் நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் செஞ்சடையான் நிகழுங்கோயில் ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.