ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.