ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.ஊராகி எனத்தொடங்கும் தேவாரம்