ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர் தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.