ஊனொடுண்டல் நன்றென வுஜனொடுண்டல் தீதென ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான் வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின் றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.