ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளே தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற ஏனைய பலவு மாகி இமையவர் ஏத்த நின்று ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.