ஊனேறு
தேவாரம்ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன்
அரவேறு புஜணு மரனுர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
குயிலேறு சோலை மருவி
தேனேறு மாவின் வளமேறி யாடு
திருமுல்லை வாயி லிதுவே.
ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் று{ர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
ஊனேறு எனத்தொடங்கும் தேவாரம்