Senthamil.Org

ஊனுலா

தேவாரம்

ஊனுலா முடைகொள் ஆக்கை 
உடைகல மாவ தென்றும் 
மானுலா மழைக்க ணார்தம் 
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி 
நானெலா மினைய கால 
நண்ணிலேன் எண்ண மில்லேன் 
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த 
திருக்கொண்டீச் சரத்து ளானே.
ஊனுலா எனத்தொடங்கும் தேவாரம்