ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும் மானுற்ற கரதலமொன் றுடையார் போலும் மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங் கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந் தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.ஊனுற்ற எனத்தொடங்கும் தேவாரம்