ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர் கானிடை யாடலான் பயில் கருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.