Senthamil.Org

ஊனுடுத்தி

தேவாரம்

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து 
ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் 
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் 
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.
ஊனுடுத்தி எனத்தொடங்கும் தேவாரம்