ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன் தேனொத் தெனக்கினி யான்தில்லைச் சிற்றம் பலவனெங்கோன் வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும் ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.