ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற் பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.