ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந் தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.