ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லாற் புஜட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் ஏறியோர் புஜதந்தம்பாற் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ றும்பல பாம்புபற்றி ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.