ஊடினாலினி யாவதென்னுயர் நெஞ்சமேயுறு வல்வினைக் கோடிநீயுழல் கின்றதென்னழ லன்றுதன்கையி லேந்தினான் பீடுநேர்ந்தது கொள்கையான்பிர மாபுரத்துறை வேதியன் ஏடுநேர்மதி யோடராவணி எந்தையென்றுநின் றேத்திடே.