ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும் பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப் படுவெண் டலையிற் பலிகொள் வாரும் மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும் ஏகம்ப மேயாரு மெல்லா மாவார் இடைமருது மேவிய ஈச னாரே.ஊக எனத்தொடங்கும் தேவாரம்