உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகி வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக் கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமாய் அருத்த மாகி அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தஆப் பாடி யாரே.