உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும் வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.