உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலத் தானனே போற்றி போற்றி.உள்ளமாய் எனத்தொடங்கும் தேவாரம்