Senthamil.Org

உள்ளத்தீரே

தேவாரம்

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் 
அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே 
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் 
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.
உள்ளத்தீரே எனத்தொடங்கும் தேவாரம்