Senthamil.Org

உள்குவார்

தேவாரம்

உள்குவார் உள்ளத் தானை 
உணர்வெனும் பெருமை யானை 
உள்கினேன் நானுங் காண்பான் 
உருகினேன் ஊறி யூறி 
எள்கினேன் எந்தை பெம்மான் 
இருதலை மின்னு கின்ற 
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம் 
எங்ஙனங் கூடு மாறே.
உள்குவார் எனத்தொடங்கும் தேவாரம்