உளைந்தான் செறுத்தற் கரியான் றலையை உகிரொன்றினாற் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி வளைந்தான் ஒருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றளைந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.