Senthamil.Org

உலர்ந்தார்தம்

தேவாரம்

உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் 
ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்
கச்சியே கம்பனைக் கமழ்புஜங் கொன்றை
நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
உலர்ந்தார்தம் எனத்தொடங்கும் தேவாரம்