Senthamil.Org

உலந்தார்தம்

தேவாரம்

உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த 
மழபாடி மன்னும் மணாளன் றானே.
உலந்தார்தம் எனத்தொடங்கும் தேவாரம்