உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.