உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றார் ஆருளரோ.
உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னுல் கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும் அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம் பெற்றா ராய பிரானார் உறைவிடம் முற்றார் மும்மதி லெய்த முதல்வனார் கற்றார் சேர்கடம் புஜர்க்கரக் கோயிலே.உற்றா எனத்தொடங்கும் தேவாரம்