உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண் புற்றரவே ஆடையுமாய்ப் புஜணு மாகிப் புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண் நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற் செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.உற்றவன்காண் எனத்தொடங்கும் தேவாரம்