உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ் செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலுங் கற்றவர் பரவி யேத்தக் கலந்துலந் தலந்து பாடும் அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.