உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால் பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான் அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை கடவா தமர ருலகே.