உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால் ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும் பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும் பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ் சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.உறைப்புடைய எனத்தொடங்கும் தேவாரம்